×

கே.ஜி.கண்டிகையில் ஆபத்தான நிலையில் உடைந்த மின்கம்பம்: மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருத்தணி: கே.ஜி.கண்டிகை துணை மின் நிலையம் அருகில் பலவீனமடைந்து அபாய நிலையில் உள்ள உயரழுத்த மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை துணை மின் நிலையம் அருகில் நொச்சிலி மாநில சாலையில் உயர் அழுத்த மின் கம்பம் பலவீனமடைந்து கம்பத்தின் மேற்பகுதியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்து, துருப்பிடித்து உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வார சந்தைக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மின் கம்பம் உடைந்து விழுந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே மின்வாரிய அலுவலர்கள் பலவீனமடைந்து, உடைந்து விழும் அபாய நிலையில் உள்ள இந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கே.ஜி.கண்டிகையில் ஆபத்தான நிலையில் உடைந்த மின்கம்பம்: மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : KG Kandigai ,Thiruthani ,Tiruvallur district ,KG Kandikai ,Tiruthani ,Nochili ,Dinakaran ,
× RELATED கே.ஜி.கண்டிகையில் ஆபத்தான நிலையில்...